சென்னை :ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த இந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு கணித்துள்ளது.
தற்பொழுது, கடலூரில் இருந்து 30கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் தற்போது அது நிலை கொண்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தற்பொழுது வலுவிழந்து உள்ள நிலையில், சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், 2-வது நாளாக இன்றும் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது
unknown node![File Image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F12%2FFengal-update.webp&w=3840&q=75)