இன்னும் இருக்கு!! 22ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!
வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17-10-2024) அதிகாலை 4.30 மணி அளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. இது வலுப்பெற்று 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இந்திய வானிலை மையத்தின் தற்போதைய வானிலை அறிக்கையின் படி, இன்று 8 மாவட்டங்களிலும் நாளை 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025