உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்தியாவின் அஞ்சும் மவுத்கில்...!!

India has won a gold medal at the 50-meter Air Rifle-3 Pushion category for India in the World shooter competition. In the World Gun Shooters Competition in Guadalajara, Mexico, he won 454.2 points in the heaviest windmill in the final of the 50 meter Air Rifle - 3 Positioning Unit for women. It is India's 8th medal in the World Cup. Ruiavio took 455.4 points in China and won gold medal and another Chinese tennis star Ding Sun Bronze.

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் – 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, அசத்தியுள்ளார்.

மெக்சிக்கோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தொடரில், மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் – 3 பொசிஷன் பிரிவின் இறுதி போட்டியில் பலத்த காற்றுக்கிடையே இருந்தும்கூட இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 454.2 புள்ளிகள் குவித்து, வெள்ளி பதக்கம் வென்றார். உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் 8வது பதக்கமாக இது அமைந்துள்ளது.

சீனாவில் ருஜியாவோ 455.4 புள்ளிகள் குவித்து, தங்க பதக்கமும், மற்றொரு சீன வீராங்கனையான டிங் சன் வெண்கல பதக்கமும் கைப்பற்றினார்.