Rohit Sharma : உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புவதால் இப்போதைக்கு ஓய்வு பற்றி எண்ணம் இல்லை என கூறியுள்ளார். கௌரவ் கபூர் எடுத்த நேர்காணலில் பேட்டியளித்த ரோஹித் சர்மா “உண்மையில் நான் இப்போது ஓய்வு பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், வாழ்கை நம்மளை எப்படி எங்கு அழைத்து செல்கிறது என்பதை பற்றி […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா […]
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடிய போது 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் இலங்கை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கையை பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. நெதர்லாந்து […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்காக ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசு தொகையாக வழங்கப்படும். உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 கோடி […]
உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக […]
நேற்று(ஜூலை 7) நடந்த FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் கால் இறுதிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான பகுதி-பி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கிராஸ்-ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. இந்த கிராஸ்-ஓவர் சுற்று ஞாயிற்றுக்கிழமை […]
லியோனல் மெஸ்ஸியை நாம் இப்போது அவரை ரசிக்க வேண்டும்.ஒருவருக்கு வயதாகிறது, அது சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன்.என்ன நடக்கப் போகிறது என்று நினைப்பது வீண்-லியோனல் ஸ்கலோனி. அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் தங்களால் இயன்ற வரையில் லியோனல் மெஸ்ஸியை ரசிக்க வேண்டும்,அவர் ஏழு முறை பலோன் டி’ஓர் வென்றவர், இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவாரா என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறினார். “நாம் இப்போது […]
பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியானது,நவம்பர் 14 ஆம் தேதி நிறைவடைகிறது. இதன்காரணமாக,கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை மிரட்டி வருகிறது.இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது. ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது சாத்தியல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் […]
‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா தோற்கும். இதற்க்கு முன்னர் கோப்பையை வெல்லாத அணி கோப்பையை வெல்லும். அதுவும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.’ இப்படி ஒரு கூற்றை உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதற்கு சொல்லி போட்டி முடிந்த பிறகு தமிழகம் முழுதும் பிரபலாமானவர் ஜோசியர் பாலாஜி ஹாசன். இவர் உலகக்கோப்பை பற்றி சொன்னது பெரும்பாலான உண்மை இருந்தது. அதே போல நயன்தாரா திருமணம் பற்றி கூறினார். அதாவது அவரது திருமணம் இந்த வருடத்திற்குள் […]
இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.இதற்காக அணிகள் எல்லாம் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது. உலககோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களை இந்திய அணி கேப்டன் கோலி சந்தித்து உரையாற்றி உள்ளார்.இந்த புகைப்படங்கள் எல்லாம் கிரிக்கெட் வட்டாரத்தில் […]
உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார். களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக […]
12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.வரும் 30தேதி முதல் ஜூலை 14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்_ல் நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதன் படி இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பரிசு தொகை […]
21வது உலகக்கோப்பைக்கான கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது. அதிர்ச்சி அளித்த அணிகள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ […]
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் – 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, அசத்தியுள்ளார். மெக்சிக்கோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தொடரில், மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் – 3 பொசிஷன் பிரிவின் இறுதி போட்டியில் பலத்த காற்றுக்கிடையே இருந்தும்கூட இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 454.2 புள்ளிகள் குவித்து, வெள்ளி பதக்கம் வென்றார். உலகக் கோப்பை […]