நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து 107 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் நடப்பு உலககோப்பையில் இதுவரை 7 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளது.அதில் மூன்று சதத்தை இடது கை பேட்ஸ்மேன்களும் , நான்கு சதத்தை வலது கை பேட்ஸ்மேன்களும் அடித்து உள்ளனர்.இந்நிலையில் நடப்பு உலககோப்பையில் மூன்று சதத்தை அடித்த இடது கை பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், ஷகிப் அல் ஹசன், ஷிகார் தவான் ஆகிய மூன்று பேரும் ஐபிஎல் தொடரில் சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையில் சதம் அடித்து கலக்கும் சன்ரைஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் !
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில்