இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த மலிங்கா!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 212 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.இந்நிலையில் இதுவரை நடந்த உலககோப்பையில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டை பறித்த வீரர்களில் மலிங்கா முதலிடத்தில் உள்ளார்.இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியை சார்ந்த மெக்ராத் 30 போட்டிகளில் 50 விக்கெட்டை பறித்து முதலிடத்தில் இருந்தார்.தற்போது அவரது சாதனையை இலங்கை அணியை சார்ந்த மலிங்கா 25 போட்டிகளில் 50 விக்கெட்டை பறித்து மெக்ராத் சாதனையை முறியடித்தார்.Malinga – 25 InngsMcgrath – 30 InngsMuralitharan – 30 InngsAkram – 33 Inngs