இந்திய அணி தனது முதல் போட்டியை தென்னாபிரிக்கா அணியுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நடப்பு உலகோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடக்கி உள்ளது.
unknown nodeநாளை ஆஸ்திரேலியா அணியுடன், இந்திய அணி மோத உள்ளது. ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகோப்பையில் பலம் வாய்ந்த அணிக்காக உள்ளது.இந்நிலையில் இந்திய அணி நாளை போட்டி என்பதால் நேற்று பயிற்சியில் ஈடுபட முயன்ற போது மழை காரணமாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை.
unknown nodeஇந்நிலையில் நேற்று லண்டனில் உள்ள பிரிட்டனுக்கான இந்திய தூதர் ருச்சி கனஷ்யாமை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரது இல்லத்தில் சந்தித்தனர். தூதரகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
unknown nodeஇந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ளனர்.மேலும் தூதரகத்தில் ருச்சி அவர்கள் குழுப்புகைப்படம் எடுத்து கொண்டார்.அந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.