இந்தோனேசியா மழை வெள்ளம்.....59 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள மழை  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  59 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள மழை  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  59 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா, அதிக மலைகளும் , அதிக பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதியாகும். இந்நிலையில் இந்தோனோஷியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் கடும் மழை மற்றும்  கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் தெற்கு சுலவேசியில் வீடுகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்த வெள்ளத்தில் உயிரிழந்த 34 பேரின் உடல்கள் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59  அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை காணாமல் போனவர்களாக  24 பேரை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்தோனேசியா மழை வெள்ளம்.....59 பேர் பலி..!!