இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, அதிக மலைகளும் , அதிக பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதியாகும். இந்நிலையில் இந்தோனோஷியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் கடும் மழை மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் தெற்கு சுலவேசியில் வீடுகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்த வெள்ளத்தில் உயிரிழந்த 34 பேரின் உடல்கள் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 […]
இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் இருக்கும் 10 வயது ஆர்யா பெர்மனா.இந்த சிறுவன் பத்து வயதில் 190.5 எடையுடன் இருக்கிறான் .இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக இந்த சிறுவன் கருதப்பட்டான் . உடல் எடையால் ஆர்யாவால் நிற்க கூட முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர் . இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது […]
இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு மாதரம் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேசியாவை சுனாமி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 281ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இது சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பேரலைகள் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை […]
இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இது நேற்று மாலை சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்தன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக […]
இந்தோனேசியாவில் கடந்த திங்கள் கிழமை விமானம் விபத்துக்குள்ளானது. இதன் மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்முழ்கி வீரர் பலியானார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய […]
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் உள்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் நீக்கம். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுந்தினம் புறப்பட்டது. லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178 பயணிகள், ஒரு குழந்தை, 2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் […]
இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது. ஜாவா தீவுகளுக்குப் பக்கத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நம்பப்படுகிறது. விமானத்தில் 189 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமானத்துக்கு டெல்லியைச் சேர்ந்த விமானி பாய்வே சுனேஜா தான் பைலட் என்று தெரியவந்துள்ளது. 6 பேர் இருந்த விமானக் குழுவுக்கு, […]
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,763 ஆக உயர்ந்துள்ளது . இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு […]
இந்தோனேசிய சிறைகளில் இருந்து நில நடுக்கம், சுனாமியால் இடிந்த நிலையில் 1200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 170 முறை நில அதிர்வும் ஏற்பட்டதால் பலு, டோங்கலா பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது.அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. […]
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஜகார்த்தாவின் அருகே உள்ள போகர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு […]