இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Ruang volcano

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount … Read more

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! 3 பேர் பலி…28 பேர் காயம்!

indonesia train accident

இந்தோனேசியாவில் இருக்கும் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்  3 பேர் உயிரிழந்தனர்.  குறைந்தது 28 பேர் காயமடைந்தனர் என்று அங்கிருந்த  அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிகாலெங்காவில் உள்ள நெல் வயல்களுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.  கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிப் பயணித்த … Read more

2023 கடைசி நாளில் நிலநடுக்கம்: பதறும் இந்தோனேசியா…சுனாமி ஆபத்து இல்லை!

earthquake shakes Indonesia

இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் நேற்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நிலையில், இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) அதிகாலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பப்புவாவில் 39 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் … Read more

வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்! சுனாமி ஆபத்து இல்லை!

north sumatra earthquake

இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் இன்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதன் பிறகு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சுனாமி அபாயம் இருப்பதாக  எச்சரிக்கப்பட்டிருந்தது. இது மேலும் அதிர்ச்சி கொடுத்தது.  இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வடக்கு சுமத்ராவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக  ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் இல்லை. எனவே, … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 11 பேர் உயிரிழப்பு.. 12 பேரை காணவில்லை!

Volcano Erupts

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் … Read more

இந்தோனேசியாவிற்கு ராஜ்நாத் சிங் பயணம்..!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 முதல் 17 ஆம் தேதி வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில்  (ADMM-Plus) ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ​​பாதுகாப்பு அமைச்சர் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா குடியரசு, ரஷ்யா மற்றும் … Read more

Indonesia:திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் சிறை சட்டத்தை எதிர்த்து தற்கொலை படை தாக்குதல்

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரியது என்று இந்தோனேசிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை கடந்த செய்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இதில் கோபமடைந்த நபர் ஒருவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காவல் நிலையம் மீது புதன்கிழமை தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு காவலர் பலியாகியுள்ளார்,இந்த தாக்குதலில் 11 பேர் காயமுற்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் அகஸ் சுஜாத்னோ என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் … Read more

Indonesia:திருமணம் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறை

இந்தோனேசியாவில் திருமணம் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய குற்றவியல் சட்டம் இந்தோனேசியாவின் பாராளுமன்றம் இந்த மாதம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கணவன் அல்லது மனைவி அல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட எவரும் அது விபச்சாரமாக கருதப்பட்டு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது  அதிகபட்ச  அபராதம் விதிக்கப்படும் என்றும் இவ்வாறான  செயல்களில் ஈடுபடுபவரின் கணவன் அல்லது மனைவியிடமிருந்தோ அல்லது திருமணத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளின் பெறோர்களிடமிருந்து புகார்கள் வந்தால் … Read more

இந்தோனிசியாவுக்கு ஏற்பட்ட மோசமான நிலையில் இந்தியா துணை நிற்கும்.! பிரதமர் மோடி வருத்தம்.!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும். – பிரதமர் மோடி ஆறுதல். இந்தோனேசியா நாட்டில் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 13,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் … Read more

உலகின் மிக பெரிய பூ கண்டுபிடிப்பு.. வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவில் காடு வழியாக நடந்து செல்லும் போது தற்செயலாக உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லேசியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. வைரலாகும் வீடியோ! காடு வழியாக நடப்பது என்பது உங்கள் உடலுக்கும் மூளைக்கும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை கடைபிடிக்கும் வகையில், சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து கொண்டிருந்த ஒருவர், காட்டுப்பகுதியில் ஒரு அபூர்வ மலர் ஒன்றைக் கண்டுள்ளார். இந்த மலரின் பெயர் ரஃப்லேசியா அர்னால்டி, இது உலகின் மிகப்பெரிய மலர் எனவும், … Read more