உடல் எடை பலரின் அழகை குறைக்கும் இதை தெரிந்து கொண்டு உங்களின் எடையை குறைத்து உங்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்..
உடல் எடையைக் குறைக்க நினைத்து ஏதேதோ உணவுகளையெல்லாம் நாம் சாப்பிட்டு வருகிறோம். அப்படி நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் நம் எடையைக் குறைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால், பதில் இல்லை என்பது தான். உடல் எடையைக் குறைக்க மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் பருமனையும் அதிகரிக்கவே செய்கிறது அல்லது எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பை உணவாக இருக்கும்.
unknown nodeஉடல் எடையைக் குறைப்பதில் நார்ச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ஏராளமாக இருந்தாலும், எடையை குறைப்பதிலும், உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கொடுப்பதிலும் வறுத்த கொண்டைக்கடலை உதவுகிறது. அதன் தோலை நீக்காமல் அப்படியே வறுத்து சாப்பிட வேண்டும். இதில் அதிகபடியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மாலை நேரங்களில் சாப்பிட ஆரோக்கியமான மற்றும் ருசியான ஸ்நாக்காக இருக்கும்.
unknown nodeஉடல் எடை குறைப்பில் இது எப்படி செயல்படுகிறது?
கலோரிகள் குறைவு
கொண்டைக்கடலையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம். இது டீ-யுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். அதோடு உங்கள் மாலை நேர பசியை போக்கும்.
புரதம் நிறைந்தது
இதிலுள்ள புரதம், உடல் எடையை அதிகரிக்க செய்யாது. புரதம் உங்களை நீண்ட நேரம் பசியுணர்வு இல்லாமல் வைத்திருக்கும். மேலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள், பன்னீர் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாட் போல சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிறைந்தது
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. ஜீரண மண்டலத்திற்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவும். எளிமையாக எங்கும் எடுத்து செல்லக்கூடிய உணவு என்பதால் பசிக்கும் போது இதனை சாப்பிடலாம். இதனை தோல் நீக்காமல் வறுத்து சாப்பிட்டு, உடல் எடை குறைவதை கண்கூடாக பாருங்கள்.
DINASUVADU