தூத்துக்குடியில் ஹெச்.ராஜா படத்தை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு!

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில்  மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில்  மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி  தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் சார்பில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

unknown node

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில்   பாஜகவின்  தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்நிலையில் அன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா படத்தை எரித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

unknown node

இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் விதிமுறைகளை மதிக்காமல் படத்தை எரித்ததாக 3  பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் அர்ச்சுனன்,மாநகர செயலாளர் ராஜா,ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் கண்ணன்,இந்திய மாணவர் சங்க நிர்வாகி அமர்நாத் மற்றும் சிலர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.