கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில், மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி […]
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவன்” நிகழ்வில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதில் தொகுப்பு வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், மத்திய பட்ஜெட், கூட்டணி கட்சிகள், எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம், மக்கள் நல திட்டங்கள், பாலியல் குற்றங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் முரண்கள் இருக்கிறதா? என்று கேள்வி […]
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்த விதமான பொறுப்புகளிலும் இருக்க முடியாது என்பதால் தன்னை விடுவிக்குமாறு விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்திருந்தார். எனவே, அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, புதிய மாநிலச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி, கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சித்து பேசினார். இது […]
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சி கொடுப்பதாகவும், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார் இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில், “500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் இன்னும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. அவர் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு , கூட்டணி ஆட்சி என்ற கூற்றுக்களுக்கு தற்போதும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக கட்சித் தலைவர் விஜய் […]
டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19இல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி […]
சென்னை : சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவின் நிலைபாடு என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் […]
சு.வெங்கடேசன்: பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதி 1964இன் படி இது அமலில் இருக்கிறது. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துவதுவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால் அது தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள […]
தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 6.5 லட்சம் வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முகமது […]
தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். மதுரையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், 16ஆம் சுற்று முடிவில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை […]
மக்களவை தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும், சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர். காலை 9.30 மணி நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் 17 ஆயிரம் வாக்குகள் பெற்று சுமார் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் 4000 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணனை விட 500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Election2024 : மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் கட்சிகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.! அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு. வெங்கடேசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் […]
திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி கொடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணா […]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.! அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு […]
பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) கோரிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை அப்போதே சிபிஎம் ஆதரித்தது என சிபிஎம் […]
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என சிபிஎம் மூத்த தலைவர் கோரிக்கை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இதுதொடர்பாக பேசிய சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், உலக […]