பாஜக – அதிமுக அரசு மக்களை புறக்கணிக்கிறார்கள் : நல்லகண்ணு

இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின் அவர்

பாஜக – அதிமுக அரசு மக்களை புறக்கணிக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் பெண்களுக்கு எவ்வளவு கொடுமை நடக்கின்றது என்பதற்கு பொள்ளாச்சி சம்பவமே ஒரு சாட்சி.

இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

unknown node

ஆளுமையுள்ள ஜெயலலிதா

அப்போது அவர் கூறியதாவது, ஆளுமையுள்ள ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது ஆளுகின்றவர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் தலையிடுவது கிடையாது என்றும், பெண்கள் சிறுபான்மையினர், தலித்துகள்  தாக்கப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜாதி மத ஆட்சி

மேலும் தற்போது உள்ள ஆட்சியாளர்கள், ஜாதி, மதத்தை வைத்து ஆட்சி செய்கிறார்கள் என்றும், பாஜக அரசும், அதிமுக அரசும் மக்களை புறக்கணிக்கிறார்கள் என்றும், மக்கள் இந்த அரசை மாற்ற தயாராகி விட்டார்கள் என்றும், ஆகவே தான் மதசார்பற்ற கட்சியான திமுகாவோடு நாங்கள் கை கோர்த்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவர் கூறுகையில், இந்த ஆட்சியில் பெண்களுக்கு எவ்வளவு கொடுமை நடக்கின்றது என்பதற்கு பொள்ளாச்சி சம்பவமே ஒரு சாட்சி என்றும், இந்த சம்பவம் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக – அதிமுக அரசு மக்களை புறக்கணிக்கிறார்கள் : நல்லகண்ணு