21 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா!

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஓவரில்  273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்செல் ஸ்டார்க்  ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டை விரைவாக வீழ்த்தியவர் என்ற புதிய சாதனை படைத்தார்.இதற்கு முன் பாகிஸ்தான் அணி வீரர் சக்லைன் முஸ்தாக் 78 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்தார். சக்லைன் முஸ்தாக்கின் சாதனையை 21 ஆண்டுகளுக்கு பிறகு  மிட்செல் ஸ்டார்க் 77 ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்தார்.77 – Mitchell Starc78 – Saqlain Mushtaq81 – Trent Boult82 – Brett Lee84 – Ajantha Mendis