வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முத்துதமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டனர்.
unknown nodeஅப்போது பேசிய துரைமுருகன், கட்சியில் எனக்கு உயர் பதவியான பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. எல்லா தொண்டர்களின் உழைப்பே திமுகவின் வளர்ச்சி ஆகும். தலைமை கழகம் நினைத்தால் ஒரு நாளில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு எம்ஜிஆர் உட்பட்ட பலர் உள்ளனர்.பணபலத்தை வைத்து திமுகவவை அழிக்க பல பேர் தற்போது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், அதனை முறியடிக்க வேண்டும். வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.கடந்த தேர்தலில் யார் யார் திமுகவுக்கு எதிராக வேலை செய்தார் என்று தலைமை கழகத்திற்கு நன்றாக தெரியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுகவை கட்டிக்காக்க ஒழுங்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் திமுக 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
unknown nodeகுட்கா வழக்கில் அமைச்சர்களும், காவல் துறை அதிகாரிகளும் கூடிய விரைவில் சிறைச்சாலை செல்வார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்து அமைச்சர்களையும் நீதிமன்றம் படியேற வைத்தவர் தலைவர் ஸ்டாலின்.என்று அவர் தெரிவித்தார்.
DINASUVADU