சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்ததை பற்றி பேசினார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைந்துள்ளது. அரசின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். நீட் தேர்வு ரத்து […]
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர்செய்யப்படும் என தெரிவித்தார். […]
கடந்த சில வருடங்களாக பெய்யாத மழை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வெள்ளம் வரும் அளவுக்கு மழையோ மழை என பெய்து வருகிறது. – அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களை கடந்து 3வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சனைகளை சட்டமன்றத்தில் தெரிவித்தனர். அதற்கு […]
100 கோடியில் வள்ளலார் மையம் வடலூரில் அமைக்கப்படும். எனவும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசினார். இன்று சென்னையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவர் பேசுகையில், வடலூரில் 1000 கோடி செலவில் […]
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்களும், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியின்றி அந்தந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என கூறப்படுகிறது. ஆளும் திமுக கட்சியில் தற்போது கட்சி பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது . அதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அனைத்து மாவட்ட வாரியாகவும் பெறப்பட்டு வருகிறது. இதில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும் இந்த பதவிக்கு யாரேனும் போட்டியிட […]
ஓ.என்.வி. விருது பெற்றிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று முதல்வரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். இத்தனை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது […]
இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக.தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இந்நிலையில் முக.ஸ்டாலினை சந்தித்த பிறகு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்ததாவது ,நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாடு குறித்தும் ,கஜா புயல் நிவாரணம் குறித்தும் விவாதித்தோம்.திராவிட முன்னேற்ற கழக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடைவெளி இருப்பதை போன்று திட்டமிட்டு வதந்தி பரப்பியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தோழமையுடன் ,வழக்கமான சந்திப்பு , அண்ணன் துரைமுருகன் பேசியதை திட்டமிட்டு வதந்தியாக […]
முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலட்சுமியை தலையை துண்டித்து கொலை செய்தவனை குண்டர் சட்டத்தில் அடைக்காமல் மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது .முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்.2- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயம்புத்தூரில் மட்டும் பெறப்பட்ட 3000 பக்க ஆதாரங்களுடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி தி.மு.கழகத்தின் சார்பில் வாதாடவிருக்கிறார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 10.9.2018 அன்று அவர் சார்ந்த துறையில், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் […]
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முத்துதமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய துரைமுருகன், கட்சியில் எனக்கு உயர் பதவியான பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. எல்லா தொண்டர்களின் உழைப்பே திமுகவின் வளர்ச்சி ஆகும். தலைமை கழகம் நினைத்தால் ஒரு நாளில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு எம்ஜிஆர் உட்பட்ட பலர் […]
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது. எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். […]
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது. எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். நூற்றாண்டு […]