இன்றைய போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகிறது. இந்தப் போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
unknown nodeடேவிட் வார்னர் 26 ரன்கள் இருக்கும் போது தனது விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 10 ரன்களில் வெளியேறினார்.அடுத்ததாக இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் இருவரும் கூட்டணியில் இணைய அதிரடியாக விளையாட தொடங்கினர்.இருவரின் விக்கெட்டை பறிப்பதற்காக இலங்கை அணி திணறியது.அப்போது நீண்ட நேர அதிரடிக்கு பிறகு ஆரோன் பிஞ்ச் 153 ரன்கள் அடுத்து வெளியேறினார்.ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் இவர்களின் கூட்டணியில் மட்டுமே 173 ரன்கள் சேர்த்தனர்.
unknown nodeஇறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.இலங்கை அணி பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா , இசுரு உதனா இருவரும் தலா இரு விக்கெட்டை பறித்தனர்.335 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.