TOKYO2020:மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி

TOKYO2020: Sonam Malik loses to India in wrestling

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் 1/8 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக்,மங்கோலியாவின் போலோடுயாகுரெல்கோவை எதிர்கொண்டார்.கடைசி 15 வினாடிகள் வரை சோனம் 2-0 என முன்னிலை வகித்தாலும் தோல்வியில் முடிந்தது.மங்கோலியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏனெனில் அவர் ஒரு பெரிய நகர்வை அடித்தார்,அதாவது,கடைசி நேரத்தில் அவர் மாலிக்குக்கு எதிராக 2 புள்ளிகள் எடுத்தார். மல்யுத்தத்தின் விதிகளின்படி, போட்டி சம புள்ளிகளில் முடிவடைந்தால்,பெரிய நகர்வு (bigger move) கொண்ட வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.அதன்படி, இந்தியாவின் சோனம்  மாலிக் தோல்வியடைந்தார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்.

unknown node

மங்கோலியாவின் போலோர்டுயா ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TOKYO2020:மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி