டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கம் வென்ற இந்தியா: ஒலிம்பிக்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.அதன்படி, பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும்,பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும்,குத்துச்சண்டை […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.அதன்படி,இன்று மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி சுற்றுப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏனெனில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 83.50 மீ ஈட்டி எறிந்தால் போதும்,ஆனால் ,நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து குரூப் ஏ பிரிவில் இரண்டாம் பிடித்து சாதனைப் […]
வெண்கலத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரரை பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தியா வீரர் பஜ்ரங் புனியா ஆடவா் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில் நேற்று களம் கண்டாா்.காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரா் மோர்டஸாவை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அரையிறுதி போட்டியில் […]
இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியா மோதவுள்ளார். இந்தியா வீரர் பஜ்ரங் புனியா நேற்று காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வியுற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியின் நான்காவது சுற்று (இறுதிப் போட்டி) இன்று நடைபெற்றது.ஆனால்,மழைக் காரணமாக போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது. இப்போட்டியில்,இந்தியாவின் அதிதி அசோக் கலந்து கொண்டு விளையாடினார்.முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அதிதி 3 வது இடத்தில் இருந்ததால்,கண்டிப்பாக அவர் ஏதேனும் பதக்கத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,இப்போட்டியின் இறுதியில் அதிதி 4 வது இடத்தை பிடித்து தோல்வியுற்றுள்ளார்.இதனால்,பதக்க வாய்ப்பை […]
டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவானது சிறப்பாக தொடங்கிய நிலையில், தற்போது வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கங்கள் பெற்ற இந்தியா: அதன்படி,முன்னதாக நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு,வெள்ளிப்பதக்கம் பெற்றார்.அவரைத் தொடர்ந்து மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலப்பதக்கமும்,41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய […]
ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில் இந்திய வீரர்கள் 4 வது இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில்,முகமது அனஸ்,நிர்மல்,அமோஜ் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜ்,உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய அணி, 4 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.இருப்பினும், இந்திய அணி […]
அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா வீரர் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆனால், அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் […]
ஒலிம்பிக் மகளீர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம் என பிரதமர் மோடி ட்வீட். இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி, பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை […]
ஒலிம்பிக் மல்யுத்தில் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார். இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இருப்பினும் முதல் ரவுண்டிலேயே 3 புள்ளிகளை பஜ்ரங் புனியா பெற்றதால், காலிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் […]
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி. கடந்த 4ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனை, இந்திய அணி இன்று எதிர்கொள்ள இருந்தது. இந்த […]
ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா,கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார்.சிறப்பாக பஜ்ரங் விளையாடினார்.இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.இருப்பினும் முதல் ரவுண்டிலேயே முதல் மற்றும் மேலும் 2 புள்ளிகளை அவர் பெற்றதால்,போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். #TeamIndia […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா பதக்க வாய்ப்பை இழந்தார். டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். That’s how you finish […]
ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். வலியை பொறுத்துக்கொண்ட நம்பிக்கை வீரர்: அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் […]
ஒலிம்பிக் மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியின்போது இந்தியாவின் ரவிக் குமாரை,கஜகஸ்தான் வீரர் கடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் கஜகஸ்தான் வீரரை தரையில் சாய்த்தார்,இதனால்,அவரது […]
ஒலிம்பிக் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதி சுற்றில் தோல்வியுற்றுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் வினேஷ் போகத் ,ஸ்வீடன் வீராங்கனை சோபியாவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ்,போட்டியின் இறுதியில் 7-1 என்ற கணக்கில் சோபியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் வினேஷ்,2 முறை உலக சாம்பியனான பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.ஆனால்,இப்போட்டியின் […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணி ஜெர்மனியை 5-4 என கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று […]
ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியுற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அதன்படி,போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே இந்திய மகளிர் அணி கோல் அடித்தது.இதனையடுத்து,சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா அணி, கோல் அடித்தது.இதனால்,1-1 என்ற கணக்கில் மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இதனையடுத்து,மீண்டும் அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க,அதனை முறியடிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.ஆனால்,போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியுற்றுள்ளது.இதனால்,வெண்கலப் […]