இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி செய்வதால், நமது உயிருக்கு உலை வைக்கும் பலவிதமான கொடிய நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
உணவு பழக்கம்
unknown nodeஇன்றைய நாகரீகமான உலகில், நமது அன்றாட வாழ்வை மேலை நாட்டு உணவுகள் தான் அக்கிரமித்து உள்ளது. இந்த உணவுகள் நமது உடலில் அதிகப்படியான கொழுப்புகள் உருவாக வழிவகுக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
எண்ணெய்
unknown nodeநம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இதய நோய்கள் ஏற்படுவதற்கு எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுவதும் ஒரு காரணம். எனவே இந்த உணவுகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
மன அழுத்தம்
unknown nodeஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்ற மிகப்பெரிய நோய் இந்த மன அழுத்தம் தான். இதில் இருந்து வெளிவருவதற்கான யுக்திகளை கையாண்டாலே, நமக்கு இதய நோய் ஏற்படாமல் நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
unknown nodeநாம் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்தாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில், நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து வந்தால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.