சென்னை :கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா தொற்றால் 3 மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஒரு குழந்தைக்கு வீட்டில் உள்ள கிணற்றுத் தண்ணீரால் அமீபா தொற்று ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்தத் தொற்று 95% தொற்று நோய் இல்லை எனவும், எனவே பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாசடைந்த நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தத் தொற்று மாசடைந்த அல்லது தேங்கிய நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் காணப்படும் நெக்லீரியா ஃபவுலரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் ஏற்படுகிறது. இந்தத் தொற்று 2 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
கேரளாவில் 2025 ஆகஸ்ட் வரை 41 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு, 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 முதல் 5 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீபா தொற்றின் அறிகுறிகள்:
கடுமையான தலைவலி
காய்ச்சல்
வாந்தி
கழுத்து விறைப்பு
மனக்குழப்பம்
மயக்கம்
