கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால், மழலையின் இந்த அப்பாவி கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கன்வாடியில் பேசிய அந்த குழந்தையின் வீடியோ அம்மாநில அரசின் கண் முன்பே சென்றடைந்துள்ளது. அட ஆமாங்க… கேரள மாநில சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் […]
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த ஆண்புலி கடித்து கொன்றது. இதையடுத்து, அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய […]
கேரளா : மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த கிரீஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் […]
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் மத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வயநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது, நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, தனது பேஸ்புக் […]
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பபக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதிக கூட்ட நெரிசல், வாகன நெரிசலை அடுத்து சாலை மார்க்க வழித்தடங்கள் பல்வேறு சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த கூட்ட நெரிசலை குறைக்க அங்கு மாற்று வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து வேண்டும் […]
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி தலைமையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கின்னஸ் சாதனைக்காக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காட்கரை காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான மேடையானது சுமார் […]
கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெத்யா எஸ் ராஜேஷ் என்கிற மாணவன் மட்டும் இந்த விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் […]
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91. மறைவு : மாரடைப்பு உள்ளிட்ட உடலநலக்கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாசுதேவன் நாயர் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி […]
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். […]
கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்ப்பட்டது . இந்த நிகழ்வு குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். வைக்கம் 100 : கேரளா மாநிலம் கோட்டையத்தில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பிறகு, வைக்கம் […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவாக அமைக்கப்பட்ட நினைவகம், தமிழக […]
சென்னை : தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெறுபவரின் விவரத்தை தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி […]
கேரளா : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து […]
கேரளா : ஆலப்புழாவில் திங்கள்கிழமை இரவு நடந்த பயங்கர விபத்தில், 5 இளம் எம்பிஎஸ் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 7 எம்பிஎஸ் மாணவர்கள் காரில் கோச்சுக்கு ஆலப்புழா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் ரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தும் பயங்கரமாக வேகத்தில் வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சன்னிதானம் முதல் நிலக்கல் […]
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதன்படி, கார்த்திகை மாதம் […]