இந்த ஆண்டு பல்வேறு நவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஓப்போ நிறுவனம்,தற்சமயம் ஃபேஸ் அன்லாக்(Face Unlock) வசதியுடன் ஓப்போ ஏ1(Oppo A1) என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
நீலம், சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக எப்7 ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.