ஹூவாய் நோவா 3இ(Huawei Nova 3E) நாளை அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய மொபைல் சந்தையில் அதிமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில்

ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய மொபைல் சந்தையில் அதிமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில் மார்ச்-20-ம் தேதி அட்டகாசமான ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும்.

ஹூவாய் ஸ்மார்ட்போனில் எப்போதுமே கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படும், அதன் அடிப்படையில் 16எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் அசத்தலான கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஹைசிலிகான் கிரீன் 659 ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஹூவாய் நோவா 3இ(Huawei Nova 3E) நாளை அறிமுகம்.!