பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு என் மேத்தா மருத்துவமனையில் உடனலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.அவளுக்கு வயது 100. குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனத்தில் தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று ஏற்றி தானும் அதில் அமர்ந்து கொண்டார் பிரதமர் மோடி. #WATCH | Gandhinagar: […]
தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் […]
1 ரூபாயை மட்டும் வாங்கி கொள்ளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரனின் இறுதி சடங்குக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஹுச்சா பஸ்யா எனும் 45 வயதுடைய பிச்சைக்காரர் ஒருவர் ஹடகாலி நகரப்பகுதியில் அமர்ந்திருந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு யாராவது நன்கொடையாக பணம் கொடுத்தால் அவர் அவர்களிடமிருந்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தொகையை திருப்பிக் கொடுத்து விடுவாராம். வற்புறுத்தி அதிக பணம் கொடுத்தாலும் […]
மறைந்த மதுசூதனன் அவர்களின் பூத ஊடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்ட […]
கடந்த மாதத்தில் மட்டும் 9, 374 இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இராண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. அதிலும் தலைநகர் டெல்லியில், வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தும் உள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் டெல்லியில் கொரோனா நடைமுறையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் கடந்த மாதத்தில் மட்டும் 9, 374 இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு […]
சத்தீஸ்கரில் கொரோனாவால் உயிரிழந்த நக்சலைட்டுக்கு, காவல்துறையினர் இறுதி சடங்கு செய்து வைத்துள்ளனர். சத்தீஸ்கரில் மாநிலம், சுக்மாவில் நக்சலைட் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு சுகாதார துறை அதிகாரிகளின் உதவியோடு காவல்துறையினர் இறுதிச்சடங்கு செய்துள்ளனர். இதுகுறித்து காவத்துறை அதிகாரி துருவ் கூறுகையில், கங்கா ஆயதா கோர்சா என்ற நக்சலைட் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தெலுங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். இதனையடுத்து, சுக்மா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தை […]
துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், கி.ரா-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் அவர்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயம் பார்த்து வந்த இவர் அதன் பின் பல நூல்களை எழுதி, கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட கூடிய அளவிற்கு எழுத்தாளராக புகழ்பெற்றார். கோபல்லபுரத்து கிராமம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதைகள் என […]
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான இடைசெவலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1922 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் அவர்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயம் பார்த்து வந்த இவர் அதன் பின் பல நூல்களை எழுதி, கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட கூடிய அளவிற்கு எழுத்தாளராக புகழ்பெற்றார்.கோபல்லபுரத்து கிராமம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது […]
தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு மரண ஒத்திகை பார்த்த பெண். டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மெய்ரா என்ற ஒரு பெண் தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டார். இதனை அடுத்து அவர் இறுதி சடங்கு ஒத்திகை ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த இறுதிச் சடங்கிற்கு ஒத்திகையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சாண்டியாகோ நகரில் உள்ள தனது மரண ஒத்திகையை நடத்த ஏற்பாடுகள் செய்தார். இந்த […]
ராஜஸ்தான் மாநிலத்தில்,கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை பொதுவாக பாதுகாப்பு உடை அணிந்து சுகாதாரப் பணியாளர்களேஅடக்கம் செய்து வந்த நிலையில், தற்போது உறவினர்களின் கோரிக்கையினால்,குடும்பத்தினரிடம் இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்படுகிறது.ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் கூறும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தான் இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம்,சிகார் மாவட்டத்தில் உள்ள கீர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா அவர்களின் இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைந்த சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடன் நட்பில் இருந்தவர் தான் சதீஷ் சர்மா. இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்பதாகவும் ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவராக இருந்து வந்த சதிஷ் சர்மா அவர்களுக்கு […]
உயிரிழந்த நடிகர் தவசியின் பூத உடல் அவரது இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து மக்களை மகிழ்வித்த நடிகர் தான் தவசி. இவர் கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை சொல்லல் மக்கள் மத்தியில் அறியப்படுபவர் என்றால் மிகையாகாது. ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த தவசி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கே உரித்தான கம்பீரமான மீசையை இழந்து ஆளே அடையாளம் தெரியாத நிலையில் கடந்த சில […]
இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை, மருத்துவமனை கூட்டிச்சென்ற பின் உயிரிழந்ததால் சோகத்தில் குடும்பத்தினர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் எனும் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தம்பதிகள் தங்களது இரண்டு வயது குழந்தை சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரம் அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. எனவே அங்கிருந்த கமெண்டர் தான் அந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். பின் அவர் குழந்தை ஏற்கனவே […]
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் 10-ம் தேதி மூளை அறுவை சிகிக்சை காரணமாக டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, அவருக்கு, கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். முகர்ஜி […]
சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் எம்.பி வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதனையடுத்து, நேற்று மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் […]
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் விங் கமாண்டர் தீபக் சாதே அவரின் உடல் இன்று அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் விமானம் 2 […]
சிகாகோவில் நடந்த இருத்திசடங்கு வீட்டின் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயம். அமெரிக்காவிலுள்ள மாநகரங்களில் ஒன்றான சிகாகோவில் இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் மூலமாக வெடித்த துப்பாக்கி குண்டுகளால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 14 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்பது குறித்து தீவிரமாக சிகாகோ போலீசார் தேடுதல் வேட்டையில் […]
மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார். ஏற்கனவே இறுதி ஊர்வலத்தில் 20 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட நிலையில், தமிழக அரசு மாற்றம் செய்து அரசானை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 வரை பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தனிமனித இடைவெளியை தவறாமல் […]
இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில […]