1 ரூபாயை மட்டும் வாங்கி கொள்ளும் பிச்சைக்காரனின் இறுதி சடங்குக்கு திரண்ட கூட்டம் …!
1 ரூபாயை மட்டும் வாங்கி கொள்ளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரனின் இறுதி சடங்குக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஹுச்சா பஸ்யா எனும் 45 வயதுடைய பிச்சைக்காரர் ஒருவர் ஹடகாலி நகரப்பகுதியில் அமர்ந்திருந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு யாராவது நன்கொடையாக பணம் கொடுத்தால் அவர் அவர்களிடமிருந்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தொகையை திருப்பிக் கொடுத்து விடுவாராம்.
வற்புறுத்தி அதிக பணம் கொடுத்தாலும் அவர் வாங்க மறுத்து விடுவாராம். இதனாலேயே இவர் பலருக்கும் அறிமுகமான ஒருவராக இருந்துள்ளார். மேலும், இந்த பிச்சைக்காரருக்கு நன்கொடை வழங்குவது தங்கள் அதிர்ஷ்டமாக அப்பகுதி மக்கள் கருதியுள்ளனர். இந்த பிச்சைக்காரர் துரதிஸ்டவசமாக தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதி ஊர்வலத்தின்போது அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்துள்ளனர். ஒரு பிச்சை எடுக்கக்கூடிய மனிதனாக இருந்தாலும் அவர் மக்களிடையே எவ்வளவு தூரம் நற்பெயர் சம்மதித்துள்ளார் என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.