கண்களை மூடிய கருப்பன் – பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பூத உடல்!

Black with eyes closed, The body of the late actor Thavasi has been placed for public viewing at his residence.

உயிரிழந்த நடிகர் தவசியின் பூத உடல் அவரது இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து மக்களை மகிழ்வித்த நடிகர் தான் தவசி. இவர் கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை சொல்லல் மக்கள் மத்தியில் அறியப்படுபவர் என்றால் மிகையாகாது. ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த தவசி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கே உரித்தான கம்பீரமான மீசையை இழந்து ஆளே அடையாளம் தெரியாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டார்.

தனக்கு உதவி வேண்டுமென மக்கள் மற்றும் தனது சகநடிகர்களை நாடிய அவருக்கு அன்பை அல்லி கொடுத்தனர் நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தவசி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் இன்று பொது மக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது ஆன்ம சாந்தி அடைய நாம் இறைவனை பிராத்திப்போம்.