டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியிலேயே […]
மகாராஷ்டிரா : மாநிலத்தின் துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்யும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் ஒரு நிமிட நீளமான வீடியோவில், பைக்கில் இருவரும் ஹெல்மெட் இல்லாமல் – நெடுஞ்சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது பின்புறம் அமர்ந்து இருந்தவர் ரீல்ஸ் […]
உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகரின் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) நடந்து கொண்டிருந்தது. கூட்டு வழிபாடு முடிந்ததும், கூட்டம் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியவுடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50ஐ எட்டலாம் அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்து எட்டா மருத்துவக் கல்லூயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் குறித்து […]
கேரளாவில் 17 வயது சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கேரள மாநிலம் வடசேரிகோணத்தில் வீட்டுக்கு வெளியே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்த 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது. சில காலமாக காதலிப்பதாக கூறப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மொபைல் போன் விவரங்கள் மற்றும் பிற சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட கோபு என்பவரும் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை […]
அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழப்பு. சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிரிழந்தார். மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக […]
கேரளாவின் திருவனந்தபுரத்தில் தெருநாய் சென்று கொண்டிருந்த பைக்கில் மோதிய விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது பைக்கின் முன் ஒரு வாகனம் முன் நாய் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டது.இதில், பைக்கில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை.கடந்த சில நாட்களாக கேரளாவில் நாய்களினால் அதிகப்படியான பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது.
கடலூர் எம்.புதூரில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பா இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு. மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மைசால் என்ற ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசாலில் உள்ள ஒரு வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் ஒன்பது உடல்களை கண்டெடுத்தோம் என சாங்லி காவல் கண்காணிப்பாளர் […]
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் தான் 18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதிகுமாரி. இவர் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏப்ரல் 4-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்காக பல வயது பிரிவில் விளையாடி அசத்திய இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நிலையில் இது தொடர்பாக ஜோதியின் பெற்றோர் கூறுகையில் ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் நிச்சயம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
இறந்த நபரின் மொபைல் போனை திருடிய கேரளாவை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கொல்லம், சாத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தான் ஜோதி சுதாகர். திருவனந்தபுரம் மாவட்டம் பெருமத்தூரைச் சேர்ந்த அருண் ஜெர்ரி எனும் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரயில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. அருணின் உறவினர்கள் அவரது உடலை பரிசோதிக்க வந்தபோது அவரது மொபைல் போன் உள்ளிட்ட பல விஷயங்கள் காணவில்லை எனவும், […]
டெல்லி குர்கானில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி குர்கான் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு ஆயுர்வேத மருத்தும் மற்றும் அறுவை சிகிச்சை பயின்று வந்த வினித் குமாரை கொலை செய்த குற்றவாளி லக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே […]
அமெரிக்காவிலுள்ள மொன்டானா மாகாணத்தில் ரயில் தடம் புரண்டதில், மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மொன்டானா எனும் மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 147 பயணிகளும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த 13 பேரும் அந்த ரயிலில் பயணம் செய்ததாகவும், […]
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொஹாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), திங்கள்கிழமை அதிகாலை மொஹாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டைக் கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அவரை மொஹாலியின் 6 வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு […]
பெண்களை பணிக்கு அழைத்து சென்ற தனியார் வேன், தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லாநத்தம் பிரதான சாலையில் தனியார் நிறுவன வேனும், தண்ணீர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதியமுத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற வேன், எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 87.இதனையடுத்து,அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. 1934 ஆம் ஆண்டில் பிறந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள்,1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தார்.1976 ஆம் ஆண்டு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் […]
ராஜஸ்தானின்,பரத்பூர் அருகே காரில் சென்ற டாக்டர் தம்பதியினர், இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் வசிக்கும் டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தா ஆகிய இருவரும் தீபா என்ற 25 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில்,டாக்டர் சுதீப் குப்தா மற்றும் […]
ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் இந்திய பெண் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,திங்கள்கிழமையன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும்,இந்த மோதலில் 21 […]
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சேர்ந்த ‘கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பிரகாஷ் இந்தியா- சீனா எல்லையின் ‘கேங்டாக் சிக்கிம்’ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 3 […]
புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார். ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா […]