மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சமீபத்தில் மருத்துவர் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து, அதே கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Man Died in Guindy Hospital

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த பிறகும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என உறவினர்கள் குற்றம் சாடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் எனும் இளைஞர் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்ட நிலையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனே அனுமதிக்குமாறு செய்யுமாறு கூறியிருக்கின்றனர்.

அவர்கள் சொன்னதை கேட்ட விக்னேஷின் உறவினர்களும் அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் வரவில்லை எனவும் இதனால் அவர் உயிரிழந்ததாகவும் விக்னேஷின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், அங்குள்ள மருத்துவர்களை கண்டித்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது விக்னேஷ் எனும் வேறொரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் தற்போது இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்