சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதால் இந்தியாவில் அதானி நிறுவன பங்குகளின் விலை கடும் […]
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் […]
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடம் பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பெரும் சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது […]
சென்னை : எழும்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண விலை உயர்த்தப்பட்ட நிலையில், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற கூறி […]
வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து. வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். […]
எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். […]
ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், […]
தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு […]
குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் […]
மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடு என்று […]
பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,பாமக நிறுவனர் […]
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும்,இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று பேரணி நடத்தப்பட்டது.அதன்படி,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை […]
ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த […]
கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது […]
டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக […]
மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத […]
ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது பென்சிலை ஒருவன் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஹனுமந்த் எனும் சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சில மாணவர்களுடன் சென்று அதில் ஒரு மாணவன் தனது பென்சிலை திருடி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு […]
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளதாகவும் விருதுநகர் காவல் […]
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருபது வயது இளைஞன் மீது கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை […]
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி தினமான இன்று பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் உச்ச நீதிமன்றத்தால் தடை […]