ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு!

Default Image

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் கருவூலத்தில் உள்ளன. 26 ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்கள் சேதமடைய கூடும் என்பதால் அவற்றை ஏலம் விடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அனுப்பிய மனுவை உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரித்தது. நரசிம்ம மூர்த்தி மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்