வழக்கை இழுத்தடித்தால் அதிகபட்ச அபராதம் – ஐகோர்ட் எச்சரிக்கை
வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து.
வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் நீதி பரிபாலனமுறை தற்போதைய நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சரளா என்பவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை நடத்தி வரும் பார்த்தசாரதி இடத்தை காலி செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.