நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!
நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் பகுதியில் உள்ள குருநாதன் கோவில் விளக்கு அருகே நடந்துள்ளது.
ஒரு இளைஞர் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்துவிட்டு, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர், காவல்துறையினர் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய பிறகு, புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை கண்டெடுத்தனர்.
இந்த சம்பவத்தில் சிறார் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில்பெண் தகராறு தொடர்பாக கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றனர்.