ஒரு நாளைக்கு 17 மணிநேரம் ஷூட்டிங்.?! அப்படி என்னதான் இருக்கிறது அந்த கதையில்.?!

ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வீதம் வேகவேகமாக நடைபெற்று வருகிறதாம். காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, கா.பெ.ரணசிங்கம் என தனது நடிப்பு திறனை காட்டும் திரைப்படங்களையும் கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடைசியாக OTT தளங்களில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா … Read more

டாக்ஸி டிரைவராக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

வத்தக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லி இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நாயகியாக நடிக்கிறார். அதில் அவர் டாக்சி டிரைவராக நடிக்கிறார். இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனையாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, வடசென்னை படத்தில் சேரி பெண்ணாக என பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யாருக்கு வேணாலும் தங்கச்சியா நடிப்பேன், ஆனால் இவருக்கு மட்டும் மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் அண்மைக் காலங்களாக தங்கச்சி கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருந்தார். இந்நிலையில் அண்மையில் பேசிய இவரிடம், நீங்கள் தங்கச்சி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடிக்கிறீர்கள். யாருடன் எல்லாம் தங்கச்சி கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க விரும்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, நான் … Read more

முற்றிலும் புதிய தோற்றத்தில் சரத்குமார் & ராதிகா! மணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் அப்டேட்!

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் இயக்குவதில் ஈடுபட்டு வருகிறார். மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு வானம் கொட்டட்டும் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் முற்றிலும் புதிய தோற்றத்தில் முறுக்கு மீசை வகிடெடுத்து சீவிய தலைமுடி என வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் … Read more

இரண்டு வாரத்தில் 50 கோடி வசூல்! குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மேலும், பாரதிராஜா, ‘நட்டி’ நடராஜ், சமுத்திரக்கனி, சூரி, என பலர் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து … Read more

7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 … Read more

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் … Read more

அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழில் கடைசி விவசாயி, லாபம், துக்ளக் என பளபதிகளிலும், தெலுங்கில் ஒரு படம், மலையாளத்தில் மார்க்கோனி மத்தாய் என தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து  வருகிறார். அக்டோபர் தொடக்கத்தில் சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. தற்போது கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்து வரும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து … Read more

இந்த காதலர் உலகப் பிரபலம்! விஜய்தேவரகொண்டாவின் அடுத்த காதல் அதிரடி!

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி உள்ளார் விஜய் தேவரகொண்டா. அதிலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். அதனால் தனது அடுத்தடுத்த படங்களை தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். கடைசியாக டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்தில் விஜய் தேவரைக்கொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு … Read more

ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, … Read more