ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அண்ணன் – தங்கை பாசப்போராட்டமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

unknown node