இந்திய மண்ணில் மீண்டும் உலகக்கோப்பை... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..

2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது.

ஆடவர் கிரிக்கெட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே , தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் மிக பிரபலமாகி வருகிறது. ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கடைசியாக 2013ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தியது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது

அடுத்து , 2017-இங்கிலாந்திலும், 2022 – நியூசிலாந்து நாட்டிலும் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முறையே முறையே இங்கிலாந்து, ஆஸ்திரிலியா ஆகிய நாடுகள் கோப்பையைவென்றன.

வரும் 2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது. இதனை பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட்டின் டிவிட்டர் கணக்கில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.