கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா டி20 […]
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலககோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதில் ஜூன் 1ல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரை அமெரிக்காவும் , மேற்கு இந்திய நாடுகளும் இணைந்து நடத்துகிறது. இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற 20 அணிகள் கலந்து கொள்கின்றது .குழு ஆட்டம் ( Group stage ), சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் சுற்று என மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும். சென்ற 2010 […]
2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை 2024க்கு முன், முத்தரப்பு தொடரில் பங்கேற்க பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் முத்தரப்பு தொடரும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் இந்த முத்தரப்பு தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா […]
நான் ஒரு இஸ்லாமியனாகவும் பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார். அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழலில் தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 […]
கடந்த 19-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இதில், இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இந்திய அணி கோப்பை கைப்பற்றாமல் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மிட்செல் மார்ஷ் செயலால் கொந்தளிக்கும் […]
கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு […]
உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக […]
2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே , தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் மிக பிரபலமாகி வருகிறது. ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடைசியாக 2013ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தியது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது அடுத்து , 2017-இங்கிலாந்திலும், 2022 – நியூசிலாந்து நாட்டிலும் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முறையே முறையே இங்கிலாந்து, ஆஸ்திரிலியா ஆகிய […]
டியர் விராட், அவர்கள் யாரும் எந்த அன்பும் செலுத்தாததால் வெறுப்பால் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அணியை பாதுகாக்கவும். நடந்து வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு ஆன்லைனில் சர்ச்சைக்குள்ளான அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதற்காக கேப்டன் கோலி கடுமையான ட்ரோலை எதிர்கொண்டார். ஷமி தனது மதத்தின் காரணமாக கடுமையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மோசமான ஆன்லைன் ட்ரோலிங் […]
இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.இதற்காக அணிகள் எல்லாம் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது. சவுதம்டனில் இந்திய மற்றும் நியுசிலாந்து இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் கோலி தலமையிலான இந்திய அணியும் கேன் […]