ஆண்டின் சிறந்த டி-20 வீரர் விருது! ஐசிசி பரிந்துரைத்த சூர்யகுமார்.!

2022 க்கான டி-20 கிரிக்கெட் வீரர், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை, ஐசிசி அறிவித்துள்ளது.

2022 க்கான டி-20 கிரிக்கெட் வீரர், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை, ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கிவருகிறது. அதேபோல் இந்த 2022 ஆம் ஆண்டில் டி-20 போட்டிகளில் சிறந்து விளையாடிய வீரர்களில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் உட்பட சாம் கர்ரன், சிக்கந்தர் ராசா, மொஹம்மது ரிஸ்வான் ஆகிய 4 வீரர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் இந்த வருடம் டி-20களில் 1,164 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். மேலும் ஒரே வருடத்தில் டி-20களில் 68 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா,  24 போட்டிகளில் 25 விக்கெட்கள் மற்றும் 735 ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன், டி-20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது உட்பட 19 போட்டிகளில் 25 விக்கெட்கள் மற்றும் 67 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

மற்றும் பாகிஸ்தான் அணியின் மொஹம்மது ரிஸ்வான், 25 போட்டிகளில் 996 ரன்கள் குவித்து 45.27 சராசரியுடன் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.