இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தபோது, இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் அதாவது ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் […]
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சையை குறித்து ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அணி, தங்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், ஆலோசனைக் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் போட்டிகளை இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என தெரிவித்திருந்தது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சர்சையைக் குறித்து […]
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடர் நடைபெறவுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் இந்த தொடரானது 8 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி முன்னதாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி இந்திய அதாவது பிசிசிஐ தாங்கள் பாகிஸ்தான் சென்று இந்த […]
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதலாவதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் தரவரிசையின் புள்ளி சற்று அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயலபட்ட பும்ரா தான். முதல் […]
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது எனவும் எங்களது போட்டிகளை துபாயில் மாற்றி வைக்குமாறும் ஐசிசிக்கு கடிதம் எழுதியாதாக ஒரு தகவல் வெளியானது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரிடியாக அமைந்தது, ஏனென்றால் பாகிஸ்தான் வாரியம் இந்த தொடருக்காக பல கோடி […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
சென்னை : கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விளையாட்டும் விளையாடியதில்லை. இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் இருப்பதனால், அதனைச் சுட்டி காட்டி ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மீண்டும் அடுத்த வருடம் தொடங்கவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆனால், அந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் […]
சென்னை : ஐசிசி நடத்தும் மிகப்பெரிய கோப்பைக்கான தொடர் என்றாலே ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும், 7 வருடங்களுக்கு பிறகு மினி உலகக்கோப்பை எனப்படும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருப்பார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல அணிகள் வெற்றி பெற்றிருக்கிறது. […]
சென்னை : ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற ஜெய்ஷா, தான் இந்த கிரிக்கெட் ஃபார்மட்டிற்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக எந்த வித போட்டியுமின்றி ஜெய்ஷா தேர்வாகியுள்ளார். இதனால் வரும் டிசம்பர்-1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார். 35 வயதில் ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் இளம் தலைவர் இவர் தான் எனப் பெருமையும் இவர் பெற்றுள்ளார். ஜெய்ஷா, பிசிசிஐ-யின் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் பல மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவந்துள்ளார். […]
சென்னை : ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இனி போதாத காலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. புதிய ஐசிசி தலைவர் “ஜெய்ஷா” ..! சர்வேதச கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்-30 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதனால், அடுத்த தலைவருக்கான தேடுதலில் ஐசிசி இருந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருந்த ‘ஜெய்ஷா’ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஐசிசி […]
சென்னை : அருண் ஜெட்லீயின் மகனான ரோகன் ஜெட்லீ அடுத்த பிசிசிஐ செயலாளராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. கடந்த 4 வருடங்களாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே ஐசிசியின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. மேலும், கிரெக் பார்கலே இம்முறை தன்னை 3-வது தவணையாக ஐசிசி தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், அவரின் இந்த அறிவிப்பைத் […]
சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷா அடுத்த ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளர் ..! கடந்த 2019ம் ஆண்டில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளராக இருந்த ஜெய்ஷா அந்த பதவியிலிருந்து விலகினார். அதன் பின் அதே ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவர் பிசிசிஐ-யின் செயலாளராகப் பதவியேற்றது முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் எடுக்கும் சில அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பலரும் வரவேற்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக […]
மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, ஆகஸ்ட் 14 மும்பையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய டி20 மகளிர் உலகக்கோப்பை நடத்துவது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். வங்கதேசத்தில் கலவரம் நடந்து வருவதால் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்ததாக […]
தோனி-ரோஹித் : இந்திய அணியின் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களை பட்டியலிடுகையில் ரோஹித் மற்றும் தோனியை நம்மால் அதில் சேர்க்காமல் இருக்க முடியாது. அதே போல் 2000 ஆண்டிற்கு மேல் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு அருமையான கேப்டன்களில் இந்த இருவரும் மிக முக்கியமானவர்கள். எம்.எஸ். தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி விளையாடிய 20 ஓவர் உலகக்கோப்பை தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் ட்ராபி என காணாத கோப்பைகளே கிடையாது என்றே கூறலாம். அதே போல 17 […]
சுனில் கவாஸ்கர் : கிரிக்கெட் வரலாற்றில் காலத்திற்கு ஏற்றவாறு புது புது நிபந்தனைகளை ஐசிசி விதித்து வருகிறது. அந்த விதிகளில் ஒரு சில விதிகள் பவுலர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு சில விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு இருக்கும். சமீபத்தில் கூட ஒரு ஓவருக்கு இரண்டு பந்துகள் பவுன்சர் போடலாம் என்ற விதியை கொண்டு வந்தனர். இந்த விதி அப்போது பல சர்ச்சையை சந்தித்தது, மேலும் இது பவுலர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இந்த விதியை குறித்து அப்போது பல முன்னாள் […]
ஐசிசி : டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 2-ஆம் இடம் இருந்த ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்து தற்போது 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இதே போல பேட்டிங் தரவரிசை, பவுலிங் தரவரிசை என அனைத்து தரவரிசை பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்களில் முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் வீரர்களை பற்றி தற்போது பார்க்கலாம். டி20 […]
ஐசிசி : சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மாதம் மாதம் சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து மரியாதையை செலுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த, ஜூன் மாதத்திற்கான ஐசிசி அறிவித்துள்ள சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றிருந்தனர். மேலும், நடைபெற்று […]
ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பையை தட்டி சென்றது. நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது […]
நியூ யார்க்: கிரிக்கெட் மைதானத்தின் தன்மை குறித்து பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரபூர்வமற்ற புகார் அளித்துள்ளது. தற்போது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவில் பெரும்பாலும் கிரிக்கெட் மைதானங்கள் கிடையாது. அங்கு தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துரிதமாக அமைக்கப்பட்டவை. அதனால் அந்த மைதானங்கள் மீதான கேள்விகள் தினமும் எழுந்தவண்னம் இருக்கிறது. பெரும்பாலும் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங் ஆடுபவர்களுக்கு கடும் சவாலானதாகவும் […]