உலக்கோப்பையில் ஆல்ரவுண்டர்களில் முதலிடத்தில் ஷாகிப் அல் ஹசன் !

Default Image

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர்  ஷாகிப் அல் ஹசன் களமிறங்கி 74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் ஒரே  உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டர்களில் 500 ரன்கள் அடித்தும் 10 விக்கெட்டை பறித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.நடப்பு உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டர்  ஷாகிப் அல் ஹசன் 542 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்