நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
unknown nodeசெபாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரராக கங்கா ஸ்ரீதர் ராஜு , கௌஷிக் காந்தி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கௌஷிக் காந்தி 1 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய கோபிநாத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
unknown nodeஅதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.நிதானமாக விளையாடி வந்த கோபிநாத் 37 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி ,2 சிக்ஸர் விளாசினார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் குறைவான ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக செபாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 149 ரன்கள் இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அரவிந்த் , ஆதித்யா பரோவா இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் அரவிந்த் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கி சத்யநாராயண ரன்கள் எடுக்கமால் வெளியேறினார்.
unknown nodeநிதானமாக விளையாடி வந்த ஆதித்யா பரோவா 29 ரன்கள் எடுத்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களுக்கும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.