காபூல் :நேற்று (அக்.3) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவரது திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.
இதனால், அந்த தனியார் ஹோட்டல் இருந்த இடமே விழாக் கோலம் போல காணப்பட்டது. மேலும், இந்த திருமணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கான் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
unknown nodeஇவரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சக வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு, ரஷீத் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், அந்த ஹோட்டலை சுற்றிலும் பாதுகாப்புக்காக பலர் துப்பாக்கி ஏந்திய படி சென்ற வீடியோக்கள் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டில் தனது தனித்திறமை மூலமாக பல சாதனைகளை நிகழ்த்திய ரஷீத் கான், 5 டெஸ்ட் போட்டிகள், 105 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும் மற்றும் டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி பவுலராக வளம் வருகிறார்.
