3-வது டி20 போட்டி… அணியில் தமிழக வீரருக்கு இடமில்லை? அந்த ஆல் ரவுண்டர் மிஸ்ஸிங்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள மூன்றாவது டி20 போட்டியின் பிளேயிங் 11-ல் தமிழக வீரர்இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs ENG

குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளை ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால், இன்றைய நாள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து உள்ளது.

இதில் தோற்றால் தொடரை இங்கிலாந்து அணி இழக்க நேரிடும். மறுபக்கம், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். இந்த நிலையில், இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளிவருகிறது.

கடந்த போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் நீக்கப்பட்டனர். இந்த முறை, ஷிவம் துபே, ரமன்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழலில், தமிழக வீரரான சுந்தர் விளையாட மாட்டார் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அணியில் தக்கவைக்கப்படுவார்.

கடந்த போட்டியில் ஒரு ஓவர் வீசி 9 ரன்களை விட்டுக்கொடுத்த சுந்தர், பேட்டிங்கில் 19 பந்துகளில் 26 ரன்களையும் விளாசி இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இன்றும், இந்த தொடரில் இடம்பெற்று விளையாடுவது சந்தேகம் தான் என தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்