டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]
பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 […]
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ரபாடா 10.75 கோடிக்கும், பட்லர் 15.75 கோடிக்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதைப்போல, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது. இன்னும் சில வீரர்கள் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்தது. அதில் குறிப்பாக […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தான். கடைசியாக நடைபெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு காணாத சாதனைப் படைத்தது. இந்த தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதில் முகமது […]
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடைந்து தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று வருகிறார். அடுத்ததாக இந்தியா ஆஸ்ரேலியாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியில் அணிக்கு முகமது ஷமி திரும்பவுள்ளார். இந்த சூழலில், மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பி வரும் அவர் சமீபத்தில் […]
பெங்களூரு : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த கட்டமாக இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில், வேக பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. மேலும், அவரும் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணிக்கு முக்கியமானத் தொடராகக் கருதப்படும் […]
முகமது ஷமி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அசத்தலான பந்துவீச்சை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது இருப்பினும், இவருக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு ஒரு சில சமயங்களில் மறுக்கவும் பட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஷமி அசத்தலாக பந்து வீசி மொத்தமாக 14 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், இந்த தொடரின் தொடக்கத்தில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் […]
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டே வரும் நிலையில் முதல்பாதியில் நடைபெறும் சில போட்டிகளுக்கான அட்டவணையை இன்று மாலை வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான முகமது சமி வரவிருக்கும் […]
2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை […]
2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து […]
தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3 டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், குடும்ப மருத்துவ […]
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முகமது ஷமி விளையாடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முகமது ஷமி ஏன் விளையாட முடியாது? Cricbuzz அறிக்கையின்படி, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால்அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என […]
நான் ஒரு இஸ்லாமியனாகவும் பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார். அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான […]
இந்திய அணியில் கிரிக்கெட் வீரரான முஹமது ஷமி, ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனால் 2020-ல் […]
முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் முகமது சமி ஆகியோர் இணையதள பக்கத்தில் பேசி கொண்டனர். அப்போது முகமது சமி மனம் திறந்து தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவித விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்கிறது. இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்வித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]
இந்தியா , தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு இந்திய அணி 395 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆனால் தென்னாபிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இறுதியாக இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 10.5 ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.அவர் வீழ்த்திய ஐந்து விக்கெட்களில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் கிடைத்தது. இதனால் இந்திய வீரர்களில் […]
இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. பின்னர் தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது . இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் […]
மனைவி தொடர்ந்த வழக்கில் முகமது சமியை கைது செய்ய அலிபோர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.இதனால் அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது.மேலும் கொல்கத்தாவில் உள்ள அலிபோர் நீதிமன்றத்தில் சமியின் மனைவி ஹசின் ஜகான் சமி மற்றும் அவரது சகோதரர் அகமது மீது […]