ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
ஐபிஎல் 2024: டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் பறித்தனர்.
லக்னோ அணியில் கே.எல் ராகுல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 168 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 4-வது ஓவரில் 8 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா 32 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். பிறகு கேப்டன் ரிஷப் பந்த் , மெக்குர்க் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.
இதில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெக்குர்க் 55 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டையும், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். டெல்லி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி இதுவரை 5 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.