INDvENG : இன்று மூன்றாவது டி20…பழைய பார்முக்கு திரும்புவாரா சூரியகுமார் யாதவ்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20யில் சூரியகுமார் யாதவ் 5 சிக்ஸர்கள் விளாசினார் என்றால் டி 20 கிரிக்கெட்டில் அவர் விளாசிய சிக்ஸர்களின் எண்ணிக்கை 150 ஆகிவிடும்
குஜராத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட டி20 தொடரை கைப்பற்றிவிடும். எனவே, தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறார்கள்.
இந்த போட்டியிலாவது அணியின் கேப்டன் சூரியகுமார் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஃபார்மும் மோசமாக உள்ளது. கடந்த 5 போட்டிகளில் அவர் மொத்தம் 20 ரன்கள் கூட எடுக்காதது அவருடைய ரசிகர்களை ஒரு பக்கம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 கிரிக்கெட் என்றாலே சூரியகுமார் யாதவின் பேட்டிங் ருத்ர தாண்டவமாக இருக்கும். ஆனால், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்கமுடிந்தது.
எனவே, அவருடைய பேட்டிங் சரியாக இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த விமர்சனங்களுக்கு இன்று நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் அசத்தலாக விளையாடி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள மூன்றாவது டி20யில் சூரியகுமார் யாதவ் 5 சிக்ஸர்கள் விளாசினார் என்றால் டி 20 கிரிக்கெட்டில் அவர் விளாசிய சிக்ஸர்களின் எண்ணிக்கை 150 ஆகிவிடும். மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசினார் என்றால் டி 20 வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் பட்லரை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. எந்த மாதிரி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..