மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.மேத்யூ ஹெய்டன் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார் .கடந்த 2009 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல் இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.பின்னர் அவர் 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
unknown nodeதற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.அவருக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பில் முறிவு ஏற்பட்டு மேத்யூ ஹெய்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.