நீட்டிக்கப்பட்ட பதவி காலம்.. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட்.!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது. பதவி நீட்டிப்புக்கு பிறகு அவரது முதல் பணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணியை வழிநடத்துவதாக இருக்கும். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் வி.வி.எஸ்.லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதில் டிராவிட்டின் பங்கு மிக முக்கியமானது. அதனை வாரியம் ஒப்புக்கொள்கிறது. மற்றும் அவரது வழிமுறைகளை வாரியம் பாராட்டுகிறது. அதே நேரத்தில் NCAஇன் தலைவராகவும், தற்போது தலைமைப் பயிற்சியாளராகவும் VVS லக்ஷ்மனின் செயல்திறனையும் வாரியம் பாராட்டுகிறது. முன்பு ஆடுகளத்தில் அவர்களது அருமையான பார்ட்னர்ஷிப்களை போலவே, டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோரின் தற்போதைய பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், ராகுல் டிராவிட்டின் தொலைநோக்கு சிந்தனை, அவரது செயல்திறன் மற்றும் அயராத தொடர் முயற்சிகள் ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, நீங்கள் எப்போதும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள் அதற்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் டிராவிட்டின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியின் உச்சத்தை நோக்கி தனது பயணத்தை தொடரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025