இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் […]
இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். – ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர். இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர் […]
ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார். நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் 3 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இன்று விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டனர். அப்போது ஏர்போர்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மாவை பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது […]
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு விளையாட சென்றுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று […]
பிசிசிஐ, புதியதாக A+ பிரிவு நடுவர்களை அறிமுக படுத்தியுள்ளது. அதர்க்கடுத்து, நடுவர்களை A,B,C என வகைப்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தையும் முறைப்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு முதன்மை பிரிவு A, முதன்மை முக்கிய பிரிவு A+ , B என வகைப்படுத்துவது போல நடுவர்களையும் வகை படுத்தியுள்ள்ளது. அதில் புதியதாக A+ நடிகர்கள் என புதிய பிரிவை ஆரம்பித்து உள்ளது. இந்த A+ பிரிவில் 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் […]
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி பந்து வீச்சாளர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதில் சச்சின் கில்லாடி. இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணிக்கு அது பரிதாபமே. இந்த ஜோடி இந்தியவின் தலைசிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ‘வாட் தி […]
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக […]